தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு

1st Apr 2021 11:42 AM

ADVERTISEMENT

 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாக குறைந்தது.

கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு, சவரன் தங்கம் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. இதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.512 உயர்ந்து, ரூ.33,808-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.64 உயர்ந்து, ரூ.4,226 ஆக உள்ளது. 

ADVERTISEMENT

வெள்ளி கிராமுக்கு ரூ.90 காசுகள் உயர்ந்து, ரூ.68.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயர்ந்து ரூ.68,500 ஆகவும் விற்பனையாகிறது. 

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,226

1 சவரன் தங்கம்...............................33,808

1 கிராம் வெள்ளி.............................68.50

1 கிலோ வெள்ளி.............................68,500

புதன்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,162

1 சவரன் தங்கம்...............................33,296

1 கிராம் வெள்ளி.............................67.60

1 கிலோ வெள்ளி.............................67,600
 

Tags : தங்கம் gold rate
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT