தமிழ்நாடு

திமுகவின் தேர்தல் அறிக்கை கள்ளநோட்டு போன்றது: துணை முதல்வர் பேச்சு

1st Apr 2021 03:16 PM

ADVERTISEMENT

 

தமிழக பொதுத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கை கள்ளநோட்டு போன்றது அது மக்களிடம் செல்லுபடியாகாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பாவை ஆதரித்து வில்லாபுரத்தில் அவர் பேசியது: 

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 2023ஆம் ஆண்டிற்குள் வீடு இல்லாத அனைத்து மக்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். 2016ல் அறிவித்த அதிமுகவின் தேர்தல் அறிக்கை முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த 2006ல் திமுக பொய்யான தேர்தல் அறிக்கையைச் சொல்லி மக்களை ஏமாற்றிவிட்டார்கள். அப்போது இரண்டு ஏக்கர் நிலம் என அறிவித்து கையளவு நிலம் தருவேன் என கருணாநிதி தெரிவித்தார். ஆனால் அதுவும் தராமல் மக்களை ஏமாற்றி விட்டார்.

திமுகவின் தேர்தல் அறிக்கை கள்ள நோட்டு. எனவே அது செல்லாது அதிமுக தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு. அதிமுக அறிவித்த தேர்தல் அறிக்கைகள் நிறைவேற்றியது உடன் அறிவிக்காத திட்டங்களான, பெண்களுக்கு இருசக்கர வாகனம் கொடுக்கப்பட்டு ஆணுக்குப் பெண் சமம் என பெரியாரின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதும் உயர்கல்வியில் கற்கும் மாணவர்கள் 24 சதவீதம் தான் உள்ளது ஆனால் தமிழகத்தில் உயர்கல்வி சேரும் மாணவர்கள் 49 சதவீதம் பேர் உள்ளனர். அதிமுக மக்களுக்கு தேவையான திட்டங்களை பார்த்துச் செயல்படுத்தி வருகிறது.

கடந்த 2006 திமுக ஆட்சியின் போது ரூ.45 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழிற்சாலைகள் நிறுவியுள்ளது. ஆனால் அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் 16 லட்சத்து 87 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. அதன் மூலம் 19 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றார். 
 

Tags : DMK election Deputy Chief Minister
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT