தமிழ்நாடு

குன்னூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை

1st Apr 2021 06:03 PM

ADVERTISEMENT

 

நீலகிரி மாவட்டம்  குன்னூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கப்பச்சி வினோத் மற்றும் உதகை தொகுதி பாஜக வேட்பாளர் போஜராஜனை ஆதரித்த குன்னூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். 

கடந்த தேர்தலில் அம்மா கொடுத்த அனைத்து  வாக்குறுதிகளையும்  நிறைவேற்றியுள்ளேன். இந்தியாவிலேயே கல்வியில் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. தடையில்லா மின்சாரம் தந்து கொண்டிருப்பது அம்மா அரசு. தொழில் முன்னேற்ற மாநாடு மூலம் 10 லட்சம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும். திமுக அவர்களது வீட்டுமக்களை பார்க்கும் கட்சி, நாட்டுமக்களை பார்க்கும் கட்சி அதிமுக, அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட உயர் பதவிக்கு வர முடியும், திமுகவில் வாரிசுகள் மட்டுமே வரமுடியும். 

ஸ்டாலின் பேசுவதெல்லாம்  பொய் பிரசாரம் ஒரு சதம் கூட உண்மைக் கிடையாது. மக்களை ஏமாற்றி அதன் மூலம் சம்பாதிக்கிறார்கள். பொய் பேசுவதற்காக நோபல் பரிசு ஸ்டாலினுக்குத் தரலாம். ஒரு லட்சம்  பேர் வரை 1100க்கு போன் செய்து பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளனர். ஸ்டாலின் மனு வாங்கி, மக்களை ஏமாற்றி வருகிறார். குன்னூரில் எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தை அமல்படுத்தி மக்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தந்தது அதிமுக அரசு.

ADVERTISEMENT

படுக இன மக்களை எஸ்.டி பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கும் பணி நடந்துவருகிறது. கோத்தகிரி பகுதியில் அளக்கரை குடிநீர்த் திட்டம் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. அடுத்தவரைக் களங்கப்படுத்தி துன்பப்படுத்துவது திமுக கட்சி, அதிமுக மக்களை மகிழ்ச்சியடையச் செய்யும் கட்சி.

ராசாவின் பேச்சின் மூலம் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். ஏழைகளுக்கு முன் உரிமை கொடுக்கும் கட்சி அதிமுக, விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன் ரத்து, தேயிலை தொழிலாளர்களுக்குக் கூலி உயர்வு
நீலகிரி மாவட்டம் உலகளவில் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றப்படும் என்றார். இந்த பிரசார கூட்டத்தில் அமமுக கட்சியிலிருந்து தாய்க்கழகத்தில் இணைந்தவர்களுக்கு முதல்வர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Tags : நீலகிரி Coonoor குன்னூர் தேர்தல் பரப்புரை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT