தமிழ்நாடு

ரஜினிக்கு முதல்வர் வாழ்த்து

1st Apr 2021 10:54 AM

ADVERTISEMENT


தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால கலை சேவையைப் பாராட்டி அவருக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு முதல்வர் பழனிசாமி தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

அதில், நடிப்புத் திறமைக்கும், கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இந்த தாதா சாகேப் பால்கே விருது.

ADVERTISEMENT

தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன். தாங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags : rajini CM Rajinikanth Phalke
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT