தமிழ்நாடு

சென்னை: கரோனா பாதிப்பில் தேனாம்பேட்டையை முந்தியது அண்ணாநகர்

1st Apr 2021 12:46 PM

ADVERTISEMENT

 

சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 6,255 ஆக அதிகரித்துள்ளது. நேற்று கரோனா நோயாளிகள் எண்ணிக்கை ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் கரோனா நோயாளிகள் அதிகமிருக்கும் மண்டலங்களான தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம் ஆகியவை கரோனா அபாயப் பகுதிகளாக மாறி வருகின்றன. இதில் கரோனா நோயாளிகள் அதிகமாக இருந்த தேனாம்பேட்டையை, அண்ணாநகர் இன்று முந்திவிட்டது.
இந்த மண்டலங்களுக்கு எல்லாம் சற்றும் சளைத்ததல்ல என்ற வகையில் இராயபுரம், திருவிகநகர், அம்பத்தூர் ஆகிய மண்டலங்களிலும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாகக் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,48,965 ஆக உள்ளது. இவர்களில் 2,38,467 பேர் குணமடைந்துவிட்டனர். 4,243 பேர் கரோனாவுக்கு பலியாகிவிட்டனர். தற்போது 6,255 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ADVERTISEMENT

இதையும் படிக்கலாமே.. கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இந்தத் தவறை மட்டும் செய்யாதீர்கள்

சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அண்ணாநகரில் 729 பேரும் தேனாம்பேட்டையில் 702 பேரும், கோடம்பாக்கத்தில் 621 பேரும், சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது தவிர, ராயபுரத்தில் 568 பேரும் திருவிகநகரில் 558 பேரும் அம்பத்தூரில் 563 பேரும் சிகிச்சையில் உள்ளனர். ஜனவரி முதல் சுமார் மூன்று மாதங்களாக கரோனா நோயாளிகள் எண்ணிக்கை மொத்த பாதிப்பில் 1 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது அது 3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மார்ச் மாதத்தில் கரோனா தொற்றுப் பரவல் எவ்வாறு படிப்படியாக அதிகரித்து வந்திருக்கிறது என்பதை இந்த புள்ளி விவரத்தைப் பார்த்தாலே புரியும்.
மார்ச் 31: 969
மார்ச் 29: 874
மார்ச் 29: 815
மார்ச் 27: 775
மார்ச் 25: 664
மார்ச் 23: 532
மார்ச் 22: 496
மார்ச் 20: 458 
மார்ச் 19: 421
மார்ச் 17: 395 
மார்ச் 16: 352 
மார்ச் 15: 317
மார்ச் 13: 271
மார்ச் 11: 292
மார்ச் 08: 229
மார்ச் 07: 251
மார்ச் 04: 189
மார்ச் 01: 171

தமிழகத்திலும் கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்போரின் எண்ணிக்கை 15,879 ஆக அதிரித்துள்ளது. நேற்று புதிதாக 2,579 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் மண்டலவாரியாக ..

Tags : coronavirus chennai update
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT