மாற்றுத்திறனாளிகள், 80 வயதானோர்களிடம் இருந்து ஏப்ரல் 5-ம் தேதி வரை அஞ்சல் வாக்குகள் பெறப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, ''80 வயது நிரம்பிய 92,559 முதியவர்களும், மாற்றுத்திறனாளிகள் 30,894 பேரும் தபால் வாக்களிக்க விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று காவல்துறை, அரசு ஊழியர்களுக்கான அஞ்சல் வாக்குகள் மே 2-ம் தேதி காலை 8 மணி வரை பெறப்படும்.
மொத்தம் 4.66 லட்சம் அஞ்சல் வாக்குகளில் இதுவரை 1.31 லட்சம் வாக்குகள் மட்டுமே பெறப்பட்டுள்ளன'' என்று கூறினார்.
ADVERTISEMENT