தமிழ்நாடு

தேர்தல் பணியில் கூடுதலாக 4,495 காவலர்கள்: திரிபாதி

1st Apr 2021 11:56 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் தேர்தல் பணிக்காக கூடுதலாக 4,495 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 

இதில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இது தொடர்பாக டிஜிபி திரிபாதி தெரிவித்ததாவது, தேர்தல் பணிக்காக கூடுதலாக 4,495 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தேர்தல் நடக்கும் தேதியில் சட்டம் - ஒழுங்கு காவலர்கள் சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

தமிழகத்தில் பதட்டம் நிறைந்த பகுதிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

ஆயுதப்படை, ஊர்காவல் படை, முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற காவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர் என்று கூறினார்.

Tags : தேர்தல் டிஜிபி திரிபாதி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT