தமிழ்நாடு

சென்னையில் 378 கரோனா கட்டுப்படுத்தப்பட்ட தெருக்கள்: ஆனால்?

1st Apr 2021 11:36 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சுமார் 378 தெருக்கள் கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தெரு அல்லது ஒரு வீட்டில் மூன்றுக்கும் மேற்பட்ட கரோனா  நோயாளிகள் இருக்கும்பட்சத்தில் அந்த தெரு அல்லது வீடு கரோனா கட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்படும்.

ஆனால், கடந்த காலங்களைப் போல, ஒரு தெருவில் ஒரு வீட்டில் கரோனா கண்டறியப்பட்டுவிட்டாலே, அந்தத் தெருவில் போக்குவரத்து முடக்கப்பட்டு, கடும் நெருக்கடி ஏற்படுத்தப்படுவது போல பொதுமக்கள் பயன்பாட்டுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதில்லை. தற்போதைய கட்டுப்பாடுகள், கரோனா நோயாளிகள் இருக்கும் வீடுகளுக்கு மட்டுமே என்று மாநகராட்சி மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னையிலுள்ள 15 மண்டலங்களிலும் தற்போது 4,163 வீடுகளில் கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 553 வீடுகள், 84 சாலைகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் வருகின்றன. 

ADVERTISEMENT

ஞாயிற்றுக்கிழமையன்று, கரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் இருந்தவர்கள், அக்கம் பக்கத்தினர் என 5,757 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 238 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னையிலுள்ள ஒரு முக்கிய நகைக்கடையில் பணியாற்றும் 54 ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 30 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. கஸ்தூரிபா நகரில் ஒரு வீட்டில் வெளியூர் சென்று வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

Tags : coronavirus chennai update
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT