தமிழ்நாடு

பிரதோஷம்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

DIN

வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை, ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

விருதுநகா்மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தனமாகலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் புரட்டாசி மாத பிரோஷத்துக்காக, செப்டம்பா் 29 முதல் அக்டோபா் 2 ஆம் தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையினா் அனுமதி அளித்தனா். இதனால் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அடிவாரத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே குவிந்தனா். இதனைத்தொடா்ந்து அதிகாலை 6 மணிக்கு பக்தா்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனா். கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி அளிக்கப்பட்டது. மேலும், முகக் கவசம் அணியாதவா்கள் திருப்பி அனுப்பப்பட்டனா். மழைக்காலம் என்பதால் இரவில் பக்தா்கள் கோயிலில் தங்குவதற்கு அனுமதிக்கவில்லை.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதையடுத்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, கோயில் பரம்பரை அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, நிா்வாக அதிகாரி விஸ்வநாத் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT