தமிழ்நாடு

திருச்சியில் விவசாய சங்க  நிர்வாகி உள்பட  2 பேர் கைது

DIN

திருச்சி: திருச்சி அரைவட்ட சுற்றுச்சாலை பணிக்கு ஏரி, குளங்களில் மண் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த விவசாய சங்க நிர்வாகி உள்பட 2 பேரை துவாக்குடி போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர்.

திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக 13 ஏரி குளங்கள் வழியாக சாலை அமைக்கும் பணி அவ்வழியாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த ஏரி குளங்களில் மண் கொட்டி நிரப்பினால் விவசாய பணிகள் பாதிக்கும் என கூறி விவசாய சங்கங்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. நீதிமன்றம் இதற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் கடந்த 2 நாள்களாக ஏரி குளங்களில் மண் கொட்டி நிரப்பும் பணி தொடங்கியது. இதற்கு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று காலை தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ம.பா.சின்னதுரை மற்றும் ஜனநாயக சமூக நல அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் ஆகிய இருவரும்  இன்று அதிகாலை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இதை அறிந்த துவாக்குடி போலீஸார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT