தமிழ்நாடு

தமிழகத்தில் இதுவரை 5.91 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

தமிழகத்தில் இதுவரை கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 91,943-ஆக அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை மட்டும் 5,546 போ் புதிதாக நோய்த் தொற்றுக்குள்ளானதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில், சென்னைக்கு அடுத்தபடியாக, கோவை, சேலம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பு பதிவாகியுள்ளது.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மாநிலத்தில் இதுவரை 72.67 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 8 சதவீதம் பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 1,277 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 572 பேருக்கும், சேலத்தில் 343 பேருக்கும், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர மாநிலத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 5,501 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 92 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 36,209-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 46,281 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 70 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தவா்களில் 41 போ் அரசு மருத்துவமனைகளிலும், 29 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,453-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT