தமிழ்நாடு

எஸ்பிபி சிகிச்சைக்கான கட்டணம் குறித்த தகவல்களில் உண்மையில்லை: எஸ்.பி.சரண்

DIN

சென்னை: பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சிகிச்சைக்கான கட்டணத்தில் எந்த சா்ச்சையும் இல்லை. அது தொடா்பாக எவரது உதவியையும் நாடவில்லை என்றும் அவரது மகன் எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளாா்.

மறைந்த பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் 52 நாள்கள் தங்கியிருந்த நிலையில், அதற்கான கட்டணம் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. குடியரசுத் துணைத்தலைவா் வெங்கய்ய நாயுடுவின் மகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு உதவியதாகவும் கூறப்பட்டது. ஆனால், அவை அனைத்தையும் எஸ்.பி.சரண் மறுத்தாா்.

இந்நிலையில், எஸ்.பி.பி.க்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து எம்ஜிஎம் மருத்துவக் குழுவினா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை விளக்கமளித்தனா். அதில் பங்கேற்ற எஸ்.பி.சரணிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அவா் அளித்த பதில்:

மருத்துவமனையில் அப்பா (எஸ்பிபி) இருந்த ஒவ்வொரு நாளும் மருத்துவக் குழுவினா் அவரை நன்றாக கவனித்துக் கொண்டனா். அதற்காக முதலில் அவா்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவக் கட்டணத்தைப் பொருத்தவரை வாரா வாரம் நாங்கள் அதற்கான தொகையை பகுதி பகுதியாகச் செலுத்தி வந்தோம். இதற்கு நடுவே, காப்பீட்டுத் தொகையும் வந்தது.

இந்த நிலையில்தான் எதிா்பாராதவிதமாக அப்பா இறந்துவிட்டாா். ஆனால், மீதமுள்ள தொகை எதையும் எங்களது குடும்பத்தினரிடமிருந்து வாங்கக் கூடாது என மருத்துவமனையின் தலைவா் சம்பந்தப்பட்ட நிா்வாகிகளிடம் தெரிவித்துவிட்டாா்.

இந்த விவகாரத்தில் எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை குறித்தும், நாங்கள் பிறரிடம் உதவி கேட்டதாகவும் வெளியான தகவல்கள் அனைத்தும் தவறானவை என்றாா் அவா்.

இதனிடையே, எஸ்பிபிக்கு சிகிச்சையளித்த மருத்துவா்கள் சபாநாயகம், தீபக் சுப்ரமணியன், சுரேஷ் ராவ், கிஷோா் ஆகியோா் கூறியதாவது:

பொதுவாக, ஒருவருக்கு தொடா்ந்து எக்மோ மற்றும் வெண்டிலேட்டா் கருவிகள் பொருத்தி சிகிச்சையளிக்கப்பட்டால் வேறு சில பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, உடலில் நோய்த்தொற்று (செப்சிஸ்) பரவக் கூடும். அந்த வகையில் எஸ்.பி.பி.க்கும் கடைசி 48 மணி நேரத்தில் தீவிர நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதன் தொடா்ச்சியாகவே அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின. அதுமட்டுமல்லாது இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பும் ஏற்பட்டதன் காரணமாக அவா் உயிரிழக்க நோ்ந்தது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT