தமிழ்நாடு

விழுப்புரத்தில் மருத்துவரின் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகைகள் திருட்டு

DIN

விழுப்புரத்தில் அண்ணன் வீட்டுக்குச் சென்றிருந்த மருத்துவரின் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டது.

விழுப்புரம் கே.கே. நகர் அப்துல்கலாம் தெருவைச் சேர்ந்தவர் ராமஷேசு(65). மருத்துவரான இவர் விழுப்புரம் கே.கே. சாலையில் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி (60). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். இவர்கள் திருமணமாகி பெங்களூரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமஷேசு தனது மனைவி லட்சுமியுடன் கடந்த மாதம் வீட்டைப் பூட்டிக்கொண்டு பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்து ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்குச் சென்றார்.

 வீட்டில் வெகு நாளாக ஆள் இல்லாததால் வீட்டை பராமரிக்க தனது நண்பர் ஜெயசீலனிடம்(49) சொல்லிவிட்டுச் சென்றார்.

இதன்படி ஜெயசீலன் அவ்வப்போது வந்து வீட்டைப் பார்த்துவிட்டு, பராமரிப்புப் பணிகளை செய்து விட்டுச் சென்றுள்ளார்.  இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை ஜெயசீலன், ராமஷேசு வீட்டுக்கு வந்துள்ளார்.  அப்போது வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் சிதறிக்கிடந்துள்ளன. இது குறித்து ராமஷேசுவுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அவர் வீட்டில் சுமார் 60 பவுன் நகைகளை வைத்து விட்டுச் சென்றதாகவும், அவை திருடு போனதாக கூறியுள்ளார்.

 இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா காவலர்கள் நேரில் வந்து பார்வையிட்டு விசாரித்தனர். பின்னர், விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.  மேலும் மோப்பநாய் சாய்ன கொண்டு வரப்பட்டது. விரல்ரேகை நிபுணர்கள் வந்ததும் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். விழுப்புரத்தில் மருத்துவர் வீட்டில் 60 சவரன் நகைகள் திருட்டு போன சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT