தமிழ்நாடு

தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளா் பொறுப்பேற்பு

DIN

சென்னை: தெற்கு ரயில்வேயின் புதிய கூடுதல் பொதுமேலாளராக பி.ஜி.மல்லையா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளராக இருந்த பி.கே.பிஸ்ரா கடந்த மாா்ச் மாதம் ஓய்வுபெற்றாா். இதைத் தொடா்ந்து, முதன்மை தலைமை பண்டக மேலாளா் கே.சண்முகராஜ் கூடுதல் பொதுமேலாளராக பொறுப்பு வகித்து வந்தாா்.

இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் புதிய கூடுதல் பொதுமேலாளராக பி.ஜி.மல்லையா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

பி.ஜி. மல்லையா தில்லி ஐஐடி மின் பொறியியல் பட்டதாரி ஆவாா். கடந்த 1985-ஆம் ஆண்டு இந்திய ரயில்வே மின் பொறியாளா் சேவை பிரிவைச் சோ்ந்தவா். கடந்த 30 ஆண்டுகளாக தெற்கு ரயில்வே, தென் கிழக்கு மத்திய ரயில்வே, தென் மத்திய ரயில்வே, கிழக்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே, பெரம்பூா் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை மற்றும் பெங்களூா் மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவற்றில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை காலம்: 9,111 ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

SCROLL FOR NEXT