தமிழ்நாடு

நாகர்கோவிலில் வணிக வளாகத்துக்கு சீல்

29th Sep 2020 03:24 PM

ADVERTISEMENT

 

நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு அருகே தனியார் வணிக வளாகம் சீல் வைத்ததால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

செட்டிகுளம் சந்திப்பு அருகே 3 தளங்களுடன் செயல்பட்டு வந்த இந்த வணிக வளாகத்தில் திரையரங்கம், அழகு நிலையம், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தன. முறையான அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

இந்த நிலையில் இந்த வளாகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்த நாகர்கோவில் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் தலைமையில் வந்த அதிகாரிகள் வணிக வளாகத்தைப் பூட்டி சீல் வைத்தனர்.

ADVERTISEMENT

இதனால் காலையில் கடைதிறக்க வந்த வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். நாகர்கோவில் வருவாய்க் கோட்டாட்சியர் அ.மயில், மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் ஆகியோர் வணிக வளாகத்தில் ஆய்வு செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT