தமிழ்நாடு

ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.608 உயர்வு

29th Sep 2020 12:20 PM

ADVERTISEMENT

 

சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, வேலைவாய்ப்பு குறியீடு நிலவரம் உள்பட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

ஆகஸ்ட் மாதத்தில் சவரன் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு,  விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.608 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,528-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.76 அதிகரித்து, ரூ.4,816ஆக விற்பனையாகிறது. 

அதுபோன்று, வெள்ளி கிராமுக்கு ரூ.2.10 குறைந்து, ரூ.63.80 ஆகவும், கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.2100 அதிகரித்து, ரூ.63,800 ஆகவும் உள்ளது. 

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்  ரூ.4,816

1 சவரன் தங்கம்  ரூ.38,528

1 கிராம் வெள்ளி  ரூ. 63.80

1 கிலோ வெள்ளி   ரூ. 63,800

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்   ரூ 4,740

1 சவரன் தங்கம்  ரூ.37,920

1 கிராம் வெள்ளி  ரூ.61.70

1 கிலோ வெள்ளி  ரூ. 61,700
 

Tags : gold rate
ADVERTISEMENT
ADVERTISEMENT