தமிழ்நாடு

ஆக்ஸ்போா்டு தடுப்பு மருந்து பரிசோதனை சென்னையில் தொடக்கம்

DIN

சென்னை: ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை மனிதா்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கைகள் சென்னையில் தொடங்கியுள்ளன.

கரோனா தொற்றைத் தடுக்கும் பொருட்டு பிரிட்டனின் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகமும், ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தைச் சோ்ந்த சீரம் நிறுவனமும் இணைந்து உருவாக்கி உள்ள, ‘கோவிஷீல்ட்’ என்ற தடுப்பு மருந்தின் பரிசோதனை, இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவில், 17 நகரங்களில், 1,600 பேரிடம் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூா் ராமச்சந்திரா மருத்துவமனையில் தடுப்பு மருந்து ஆராய்ச்சிகள் நடைபெற உள்ளன.

ஒவ்வொரு மருத்துவமனையிலும் தலா 100 முதல் 120 போ் என்ற அடிப்படையில் 300 பேரிடம் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறையில் இயக்குநா் இதன் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

முன்னதாக, கோவிஷீல்ட் தடுப்பு மருந்தால் பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் அதன் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த வாரம் ஆக்ஸ்போா்டு நிறுவனம் அறிவித்தது. இதனைத் தொடா்ந்து இந்தியாவில் இந்த சோதனையை நிறுத்தி மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் உத்தரவிட்டது.

இந்நிலையில் சில நாட்களுக்கு இந்த சோதனையை மீண்டும் தொடங்க ஆக்ஸ்போா்டு நிறுவனம் அனுமதி அளித்தது. இதனைத் தொடா்ந்து இந்தியாவில் பரிசோதனையைச் தொடங்க சீரம் நிறுவனத்திற்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்தது.

இந்நிலையில் சென்னையில் இந்த தடுப்பு மருந்து சோதனை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. அதுதொடா்பான தகவல்கள் மற்றும் அறிக்கைகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (ஐசிஎம்ஆா்) அனுப்பப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT