தமிழ்நாடு

நாமக்கல்: 3 லாரிகள், ஆம்புலன்ஸ் அடுத்தடுத்து மோதிய விபத்தில் மூவர் படுகாயம்

DIN

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் மீது மற்றொரு லாரி மோதியதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

மூன்று லாரிகள், ஒரு தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டதில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பெரியசாமி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் , தலைமைக் காவலர் பார்த்திபன் உள்பட 3 பேர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.       

ஏற்கனவே விபத்து நடந்த இடத்தில் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு இருக்கும் போது பின்னால் வந்த லாரி வேகமாக மோதியதால் இந்த விபத்து நடந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலையில் அடிபட்டு கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை: 4,146 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

ஸ்ரீபாஞ்சாலி அம்மன் கோயிலில் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

பதுக்கப்பட்ட 2,000 புடவைகள் பறிமுதல்

வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

SCROLL FOR NEXT