தமிழ்நாடு

திருச்சியில் சாய்ந்த கொட்டகையைச் சரிசெய்யக் கோரி வியாபாரிகள் மறியல்

DIN

திருச்சியில் நேற்றிரவு பெய்த மழையின் காரணமாக தென்னூர் உழவர் சந்தையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக காய்கறிகள் சந்தையின் கொட்டகை சரிந்து விழுந்ததால் வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி மாநகரின் மத்தியில் காந்தி சந்தை உள்ளது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் காய்கறி, மளிகை சாமான்களை விற்பனை செய்து வந்தனர்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த காய்கறி சந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதற்கு மாற்று ஏற்பாடாக சில்லறை வியாபாரிகளுக்கு மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானம், திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க சாலை உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக சில்லறை விற்பனை காய்கறி சந்தை அமைக்கப்பட்டது.

மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட இந்த தற்காலிக காய்கறி சந்தைகளில் வியாபாரிகளுக்கு போதிய இட வசதி செய்து கொடுக்கப்பட்டது. மேலும் வெயிலுக்கு நிழலாக கொட்டகையும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு திருச்சி மாநகரில் பரவலாக மழை பெய்தது. இதன்காரணமாக திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக காய்கறி சந்தைக்கான கொட்டகை, மண் அரிப்பின் காரணமாக, ஸ்திரத்தன்மையை இழந்து திடீரென சரிந்து விழுந்தது.

இங்கு 52 கடைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், காலை முதலே கொட்டகையின் ஸ்திரத்தன்மையில் சந்தேகமடைந்த வியாபாரிகள் கொட்டகைக்கு வெளியே நின்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். 
இந்த நிலையில் இந்த கொட்டகை சரிந்து விபத்துக்குள்ளானது. வியாபாரிகள் ஒரு சிலர் மட்டுமே உள்ளே அமர்ந்து இருந்ததால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. 

மேலும், சம்பவம் அறிந்து அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் கொட்டகையை அப்புறப்படுத்தும் பணியிலும், புதிய கொட்டகை அமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். சாய்ந்த கொட்டகையைச் சரி செய்து தரக்கோரி தற்போது காய்கனி வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT