தமிழ்நாடு

மெரீனா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி? பதிலளிக்க உத்தரவு

DIN


சென்னை: மெரீனா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பதில் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பீட்டர்ராயன் என்பவர்  மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நாள்தோறும் ரூ.500 வீதம் நிவாரண உதவி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மெரீனா கடற்கரையை தூய்மைப்படுத்துவது, புயலில் சேதமடைந்த பெசன்ட் நகர்- லூப் சாலையை புனரமைப்பது, மீன் கடைகளை ஒழங்குபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கரோனா நோய்த் தொற்று காரணமாக முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு  தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மெரீனா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனரா? என கேள்வி எழுப்பினர். 

அப்போது அரசு தரப்பில், மெரீனா கடற்கரையில் பொதுமக்கள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை என  தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடற்கரைகளில் பொதுமக்களை அனுமதிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் அந்த விவகாரத்தில் நீதிமன்றம் அழுத்தம் தர முடியாது. அதேநேரம் பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாக தமிழக அரசு, சென்னை மாநகராட்சி எடுத்துள்ள முடிவு குறித்து வரும் அக்டோபர் 5-ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டனர்.

மேலும் மெரீனாவிலிருந்து அகற்றப்பட்ட கடைகளுக்கு பதிலாக புதிய கடைகளை வைக்க உரிமம் வழங்குவது தொடர்பான ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகளின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT