தமிழ்நாடு

பட்டா ரத்து உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி தருமபுரியில் ஆர்ப்பாட்டம்

DIN

பட்டா ரத்து உத்தரவைத் திரும்பப் பெறக்கோரி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தருமபுரி மாவட்ட திமுக செயலர் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் த.ஜெயந்தி, மதிமுக மாவட்டச் செயலர் அ.தங்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் ஏ.குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைமை நிலையச் செயலர் மா.தமிழ்செல்வன், மாநில அமைப்புச் செயலர் கி.கோவேந்தன், திமுக முன்னாள் எம்பி தாமரைச்செல்வன் ஆகியோர் பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தருமபுரி அருகே ஏ.ரெட்டிஅள்ளி வருவாய் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தலித், அருந்ததியர், குறவர், போயர் சமூகத்தைச் சேர்ந்த வீடற்ற ஏழை மக்களுக்கு வழங்கிய வீட்டு மனைகளைப் பறிக்கும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும். இந்த பட்டாக்களை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும். ஏற்கெனவே பட்டா வழங்கிய இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டும் திட்டத்தைக் கைவிட்டு, அரசு புறம்போக்கு நிலத்தில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT