தமிழ்நாடு

தொடர் மழையால் மானாமதுரையில் மண்பாண்டத் தொழில் பாதிப்பு; தொழிலாளர்கள் கவலை

வாழ்வியல் வழிகாட்டி ஆர். கே


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால் மண்பாண்டத் தொழில் பாதிக்கப்பட்டு வருமானம் இழந்துள்ளதுள்ளதால் மண்பாண்டத் தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர். 

மானாமதுரையின் அடையாளமாக இருப்பது இங்கு நடைபெறும் மண்பாண்டத் தொழிலாகும். ஆண்டுதோறும் சீசனுக்குத் தகுந்தவாறு மானாமதுரையில் மண்பாண்டப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

கர்நாடக இசைக்கச்சேரியில் பயன்படுத்தப்படும் கடம் தமிழகத்தின் மானாமதுரையில் மட்டும்தான் தயாரிக்கப்படுகிறது. இங்கு ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கடத்தை உருவாக்கி வருகின்றனர். கடல் கடந்தும் வெளிநாடுகளில் மானாமதுரை கடம் இந்த ஊரின் பெருமையை ஒலித்து வருகிறது. மானாமதுரை குலாலர் தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்ணக்கான குடும்பத்தினர் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 

இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்டப் பொருள்கள் உறுதியுடன் இருப்பதற்கு மானாமதுரை பகுதி கண்மாய்களில் கிடைக்கும் மண்ணின் தனித்தன்மை என்பது  மறுக்க முடியாத உண்மையாகும். களிமண்ணுடன் பலவகை மண்ணை சேர்த்து பிசைந்து மண்பாண்டப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்காக இங்குள்ள குலாலர் தெரு பகுதியில் உள்ள மண்பாண்ட தொழில்கூடத்தில் வெளியிடங்கள் மற்றும் இப்பகுதி கண்மாய்களிலிருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட மண் குவித்து வைக்கப்பட்டுள்ளது.  

மானாமதுரையில் மண்பாண்டத் தொழில் கூடம் மழையால் சேரும் சகதியுமாகக் காணப்படுகிறது.

தற்போது மானாமதுரை பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது சாறல் தூறுவதும் கன மழை பெய்வதும் வானம் மேகமூட்டத்துடன் மிதமான வெயில் அடிப்பதும் தென்றல் காற்று வீசுவதுமாக கால நிலை மாறிமாறி நிலவுகிறது. இதனால் மானாமதுரை பகுதியில் கடந்த ஒரு வாரமாக மண்பாண்ட பொருள்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மானாமதுரையைச் சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளர்கள் கூறுகையில் தொடர் மழையால் மண்பாண்டப் பொருள்களை உற்பத்தி செய்ய முடியவில்லை.பொருள்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மண் வகைகளை மழைத் தண்ணீர் சூழந்து நிற்கிறது. ஏற்கனவே உற்பத்தி செய்துள்ள பொருள்களை உலர வைக்க முடியவில்லை. கடந்த 6 மாதங்களாக கரோனா தொற்று பிரச்னையால் தொழில் முடங்கியிருந்தது. தற்போது மழை காரணமாக மண்பாண்டத் தொழில் தொடர்ந்து நடைபெறுவது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வருமானம் இழந்து தவிக்கின்றனர். அரசு எங்களுக்கு வழக்கம்போல் மழைக்காலங்களில் வழங்கும் நிவாரண நிதியை இந்தாண்டு உயர்த்தி வழங்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஜனநாய கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

‘சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை’

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம் மீட்பு

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

அருணாசல், நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT