தமிழ்நாடு

18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

29th Sep 2020 04:00 AM

ADVERTISEMENT


சென்னை: தமிழகத்தில் 18 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.29) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது: 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 18 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.29) இடியுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். கடலூர், நீலகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். 

ADVERTISEMENT

விலகத் தொடங்கியது பருவமழை: தென்மேற்கு பருவமழை ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநில பகுதிகளிலிருந்து திங்கள்கிழமை முதல் விலகத் தொடங்கியது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி 70 மி.மீ., சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருச்சி மாவட்டம் மணப்பாறை தலா 60 மி.மீ., ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம், நாகப்பட்டினம்,  கடலூர் மாவட்டம் நெய்வேலி தலா 50 மி.மீ., திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர், ஈரோடு மாவட்டம் கொடுமுடி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தலா 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT