தமிழ்நாடு

தமிழகத்தில் திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

29th Sep 2020 04:58 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு திருச்சி உள்பட ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், திருச்சிராப்பள்ளி, தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் ஏனைய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களான சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சென்னை, காஞ்சிபுரம், செல்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகிளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்

அண்ணாமலை நகர், சிதம்பரம் தலா 13 செ.மீ மழையும், கொள்ளிடம் 11 செ.மீ மழையும், கொத்தவச்சேரி 9 செ.மீ மழையும், திருக்கழுக்குன்றம், ஏத்தாப்பூர் தலா 8 செ.மீ மழையும், வானமாதேவி, தொழுதூர், கங்காவல்லி, மணலூர்பேட்டை, தழுத்தலை தலா 7 செ.மீ மழையும் பெய்துள்ளது. 

Tags : Rain
ADVERTISEMENT
ADVERTISEMENT