தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 5,546 பேருக்கு கரோனா

DIN


தமிழகத்தில் புதிதாக 5,546 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 5,546 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,91,943 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் 1,277 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 70 பேர் (அரசு மருத்துவமனை -41, தனியார் மருத்துவமனை -29) பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்நது, மொத்த பலி எண்ணிக்கை 9,453 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 5,501 பேர் ஒரேநாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,36,209 பேர் குணமடைந்துள்ளனர். 46,281 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 85,997 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 72,67,122 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா 1 தனியார் ஆய்வகங்களுக்கு புதிதாக அனுமதியளிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 120 என மொத்தம் 186 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

SCROLL FOR NEXT