தமிழ்நாடு

ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது ஆபரணத் தங்கம்

29th Sep 2020 12:18 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது.

பவுனுக்கு ரூ320 குறைந்து, ரூ.37,920 - க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, வேலைவாய்ப்பு குறியீடு நிலவரம் உள்பட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

ஆகஸ்ட் மாதத்தில் பவுன்  விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு,  விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், சென்னையில் திங்கள்கிழமை ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது.
பவுனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.37,920 - க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து, ரூ.4,740 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 70 பைசா குறைந்து, ரூ.61.70 ஆகவும், கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.700 குறைந்து, ரூ.61,700 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)
1 கிராம் தங்கம்   ரூ 4,740
1 பவுன் தங்கம்    ரூ.37,920
1 கிராம் வெள்ளி   ரூ.61.70
1 கிலோ வெள்ளி   ரூ. 61,700

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)
1 கிராம் தங்கம்  ரூ.4,780
1 பவுன் தங்கம்  ரூ.38,240
1 கிராம் வெள்ளி  ரூ. 62.40
1 கிலோ வெள்ளி   ரூ. 62,400

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT