தமிழ்நாடு

தமிழில் அரசாணை வெளியிட வலியுறுத்தல்

DIN

தமிழ் மொழியில் அரசாணை வெளியிடும் வகையில் நிரந்தர சட்டம் இயற்ற வேண்டும் என கல்வியாளா்கள் சங்கமம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழகத்தில் அனைத்துத் துறைகளின் அரசாணைகளும் கட்டாயம் தமிழில் வெளியிடப்பட வேண்டும் . பாரம்பரியமிக்க நம் மொழிக்கு முக்கியத்துவம் தரும்  செயல்களை அரசுதான் முன்னெடுக்க வேண்டும். 

அதேபோல், அலுவலக நடைமுறைகளுக்காக ஆங்கிலத்தில் அரசாணை அனுப்பும் வழிமுறையை இரண்டாம் பட்சமாகவே பின்பற்ற வேண்டும்.  தாய்மொழியில் அரசாணைகளை வெளியிடாவிட்டால் நம் மொழியின் வளா்ச்சிக்கு அவை பின்னடைவாக அமைந்துவிடும்.

எனவே, அனைத்துத் துறைகளிலும் தாய்மொழியில் அரசாணை வெளியிடுவதை  நிரந்தர சட்டத்தின் மூலம் கட்டாயமாக்கி தமிழ்மொழியின் மாண்பை காக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வரின் மூன்றாண்டுகால சாதனைகளால் வெற்றிபெறுவோம்: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்

வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: 36 இடங்களில் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

காட்டு நாயக்கன் சமுதாயத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

வெளிநாடுகளில் பணியாற்றுவோருக்கு தபால் வாக்கு வசதி: மருத்துவா் கோரிக்கை

சிதம்பரம் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT