தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 5,791 பேருக்கு கரோனா

DIN

தமிழகத்தில் மேலும் 5,791 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளோனோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 80,808-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மாநிலத்தில் இதுவரை 71 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 8 சதவீதம் பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனைகளில் அதிகபட்சமாக சென்னையில் 1,280 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 596 பேருக்கும், சேலத்தில் 378 பேருக்கும், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர மாநிலத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை அன்று 96,102 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. விரைவில் நாள்தோறும் 1 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ள இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் மற்றொரு புறம், நோய்த் தொற்றிலிருந்து மேலும் 5,706 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 91 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 25,154-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 46,341 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 80 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தவா்களில் 53 போ் அரசு மருத்துவமனைகளிலும், 27 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,313-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

SCROLL FOR NEXT