தமிழ்நாடு

'அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக். 7-ல் அறிவிப்பு'

28th Sep 2020 03:24 PM

ADVERTISEMENT


அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து வரும் அக்டோபர் 7-ம் தேதி அறிவிப்பார்கள் என்று இணை  ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

செயற்குழு நிறைவு பெற்ற நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்டோபர் 7-ம் தேதி அறிவிப்பது என்று செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி அதிமுக ஒருங்கணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி இருவரும் இணைந்து அக்டோபர் 7-ம் தேதி அறிவிப்பார்கள் என்று கூறினார்.
 

Tags : palanisamy TN CM ADMK cm candidate
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT