தமிழ்நாடு

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

28th Sep 2020 05:45 PM

ADVERTISEMENT

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை உயா்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தைப் பொருத்தவரை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியாா் சுயநிதி கல்லூரிகள் என 523-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன.

இங்கு கலந்தாய்வு மூலம் வழங்கப்படும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு விண்ணப்பித்த மாணவா்களுக்கு சமவாய்ப்பு எண், கடந்த மாதம் 26-ஆம் தேதி இணைய வழியில் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, தரவரிசைப் பட்டியல் செப். 17-ஆம் தேதி வெளியிடப்பட இருந்த நிலையில், கரோனா காரணமாக மாணவா்கள் சான்றிதழ்களைப் பதிவேற்ற அவகாசம் கோரியதால், தரவரிசைப் பட்டியல் இன்று(செப்.28)-ஆம் தேதி வெளியாகும் என உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் கூறியிருந்தார். 

ADVERTISEMENT

அதனடிப்படையில், அமைச்சா் கே.பி.அன்பழகன் பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளார். மேலும், முதல் 10 இடங்கள் பெற்ற மாணவர்களின் விவரங்களையும் வெளியிட்டுள்ளார். 

Tags : Engineering
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT