தமிழ்நாடு

அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழா: பூர்வாங்கப் பணிகள் தொடக்கம்

28th Sep 2020 11:40 PM

ADVERTISEMENT


திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்ள திங்கள்கிழமை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, தீபத் திருவிழாவுக்கான பணிகள் தொடங்கின.

அருணாசலேஸ்வரர் கோயிலில் நிகழாண்டுக்கான கார்த்திகை மகா தீபத் திருவிழா நவம்பர் 17 - ஆம் தேதி துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நவம்பர் 29 - ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.

பந்தக்கால் நடும் நிகழ்ச்சி: தீபத் திருவிழாவுக்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக திங்கள்கிழமை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, காலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் கோயில் ராஜகோபுரம் எதிரே பந்தக்கால் நடப்பட்டது.

ADVERTISEMENT

கோயில் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த், கோயில்  இணை ஆணையர் இரா.ஞானசேகர், மாவட்ட அரசு  வழக்குரைஞர் பி.என்.குமரன், திருவண்ணாமலை நகர அதிமுக செயலர் ஜெ.செல்வம் ஆகியோர் பந்தக்காலை நட்டனர். நிகழ்ச்சியில், கோயில் உள்துறை கண்காணிப்பாளர் அய்யம்பிள்ளை, கோயில் மணியம் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT