தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.38,240

DIN

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.38,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, வேலைவாய்ப்பு குறியீடு நிலவரம் உள்பட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிா்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.38,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.9 குறைந்து, ரூ.4,780 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து, ரூ.62.40 ஆகவும், கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து, ரூ.62,400 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,780

1 பவுன் தங்கம்...............................38,240

1 கிராம் வெள்ளி.............................62.40

1 கிலோ வெள்ளி.............................62,400

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,789

1 பவுன் தங்கம்...............................38,312

1 கிராம் வெள்ளி.............................62.80

1 கிலோ வெள்ளி.............................62,800

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT