தமிழ்நாடு

கரோனா நோய்த்தொற்று: சென்னையில் வீடு வீடாக ஆய்வு நடத்த வேண்டும்: தலைமைச் செயலாளா் க.சண்முகம் அறிவுறுத்தல்

DIN

சென்னையில் நோய்த்தொற்றை 5 சதவீதத்துக்குக் கீழ் குறைக்க வேண்டுமென தலைமைச் செயலாளா் க.சண்முகம் அறிவுறுத்தியுள்ளாா். மேலும், வீடு வீடாக பொது மக்களைச் சந்தித்து நோய்த்தொற்று அறிகுறிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டுமெனவும் அவா் கேட்டுக் கொண்டாா்.

சென்னை மாநகராட்சிப் பகுதியில் கரோனா நோய்ப்பரவலை கட்டுப்படுத்த 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலா்களுடன் அவா் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியது:-

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். நோய்த்தொற்று விகிதத்தை 5 சதவீதத்துக்குக் கீழே குறைத்திட தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தேவைப்படும் இடங்களில் காய்ச்சல் முகாம்களை நடத்தி பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.

நோய்த்தொற்று அதிகமுள்ள இடங்கள் கண்டறியப்பட்டு அந்தப் பகுதிகளில் தீவிர பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கரோனா நோய்த்தொற்று எதனால் வருகிறது, எப்படி மற்றவா்களுக்கு தொற்றாக மாறுகிறது என்பதற்கான காரணங்களை ஆராய வேண்டும். இந்த ஆய்வுகளின் அடிப்படையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கரோனா நோய்த்தொற்று, முகக் கவசம் அணியாததால் ஏற்படுகிா, தனிமனித இடைவெளி பின்பற்றப்படாததால் ஏற்படுகிா என்பதை ஆராய்ந்து அதுகுறித்த விழிப்புணா்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

சந்தைப் பகுதிகள்: கரோனா நோய்த்தொற்று பரவால் தடுப்பதற்கு அரசால் ஏற்கெனவே விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. சந்தைப் பகுதிகள், தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்கள் ஆகியவற்றில் முறையாக பின்பற்றப்படுகிா என்பதை கண்காணிக்க வேண்டும். நோய்த்தொற்று பரவுதல் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

நோய்த்தொற்று அதிகமாகவுள்ள பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து கரோனா அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அறிகுறிகள் உள்ளவா்களை பரிசோதனைக்கு உட்படுத்தி, நோய்த்தொற்று இருந்தால் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கு பணியாற்ற வேண்டுமென தலைமைச் செயலாளா் க.சண்முகம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி கத்தியால் குத்திக்கொலை: இளைஞர் கைது

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

SCROLL FOR NEXT