தமிழ்நாடு

இடைக்காட்டூர்- பாப்பான்குளம் இடையே சேதமடைந்த சாலையை புதிதாக அமைத்து தர கோரிக்கை

27th Sep 2020 11:23 AM

ADVERTISEMENT


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் இடைக்காட்டூர்- பாப்பான்குளம் இடையே சேதமடைந்துள்ள குறுக்குச் சாலையை புதிதாக அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இடைக்காட்டூரில் உள்ள திரு இருதய ஆண்டவர் பேராலயம் உலகப் புகழ் பெற்றதாகும். தமிழக அரசு இந்த கிராமத்தை சுற்றுலாத்தலமாக அறிவித்துள்ளது.

இடைக்காட்டூரிலிருந்து பாப்பான்குளம் வழியாக பெரியகோட்டைக்கு தார் சாலை செல்கிறது. இடைக்காட்டூர் அரசு பள்ளிக்கூடம் பின்றம் வயல்வெளிகளுக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ள 2 கி.மீ தூரமுள்ள குறுக்குச்சாலை மேற்கண்ட பிரதான சாலையுடன் இணைகிறது. ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்துக்குட்பட்ட இச் சாலை தற்போது பெயர்ந்துபோய் சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் தார்சாலை இருந்ததற்கான  அடையாளத்தை  இழந்து காட்சியளிக்கிறது.

இது குறித்து இடைக்காட்டூர் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் சத்தியசீலன் கூறியதாவது. மேற்கண்ட குறுக்குச் சாலையை வயல்வெளிகளுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

மேலும் விவசாய வாகனங்கள் இந்தச் சாலையில் அடிக்கடி சென்று வருகின்றன. ஆனால் இந்த குறுக்குச் சாலை தற்போது சேதமடைந்துள்ளது. இச் சாலையை ஒட்டி இடைக்காட்டூர் வைகையாற்றிலிருந்து சிவகங்கைக்கு குடிநீர் திட்டக் குழாய்கள் செல்கின்றன. சேதமடைந்த இந்தச் சாலையை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் புதிதாக அமைத்துத்தர வேண்டும் என்றார்.

Tags : damaged road
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT