தமிழ்நாடு

ஆம்பூர் அருகே செல்போனில் பேசியபடி சென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து பலி 

27th Sep 2020 12:36 PM

ADVERTISEMENT

ஆம்பூர்: ஆம்பூர் அருகே செல்போனில் பேசியபடி சென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சி குட்டகிந்தூர் கிராமத்தை  சேர்ந்த திருமூர்த்தி மனைவி லஷ்னா.  இவரது வீட்டின் அருகே உள்ள அவர்களது விவசாய நிலத்தில் செல்போனில் பேசியபடி சென்ற பொழுது திடீரென கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார்.

பின்னர் அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் கிணற்றில் விழுந்த லஷ்னாவை காப்பாற்ற முயற்சி செய்தும் பலன் அளிக்காமல்  நீரில் மூழ்கி உயிரிழந்தார். உடனடியாக விரைந்து வந்த உமர்ஆபாத் காவல் நிலைய காவலர்கள் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

திருமணமாகி மூன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT