தமிழ்நாடு

பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: ஓபிஎஸ்

27th Sep 2020 11:42 AM

ADVERTISEMENT

திருச்சியில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் ஓபிஎஸ் உறுதி அளித்துள்ளார். 

திருச்சியில் பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் ஊற்றப்பட்டு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அந்த பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

ADVERTISEMENT

சமூகநீதிக்காக பாடுபட்ட பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியாரின் சிலையை திருச்சியில் மர்ம நபர்கள் அவமரியாதை செய்திருக்கும் செயலுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இக்குற்றச் செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது அதிமுக அரசு சட்டப்படி கடும்நடவடிக்கை எடுக்கும்' எனப் பதிவிட்டுள்ளார். 

Tags : பெரியார்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT