தமிழ்நாடு

பக்தர்கள் இன்றி குணசீலம் கோவில் தேரோட்டம்

27th Sep 2020 11:16 AM

ADVERTISEMENT

கரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி குணசீலம் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள குணசீலம் பிசன்ன வேங்கடாசலபதி பெருமாள் கோவிலில் பிரமோற்சவ திருவிழா கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு உற்சவ பெருமாள் தினமும் அன்ன வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், கஜ வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளினார்.

கரோனா பரவல் காரணமாக பக்தர்கள்  இன்றி தேரோட்டத்தை நடத்த கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்திருந்தனர். அதன்படி விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு பூ அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து காலை 5 மணிக்கு புண்யாகவாசனம், திருவாராதனம் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பாடு கண்டு தேரில் எழுந்தருளினார். 

ADVERTISEMENT

இதனையடுத்து டிராக்டர் உதவியுடன் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குறைந்த அளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா... கோவிந்தா என்று பக்தி கோஷமிட்டனர். பாதுகாப்பு பணியில் வாத்தலை காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Gunaseelam temple
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT