தமிழ்நாடு

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

27th Sep 2020 03:19 PM

ADVERTISEMENT

அடுத்த 24 மணிநேரத்தில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தென்காசி, தஞ்சாவூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தர்மபுரி, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மதுரை, திருவாரூர், சிவகங்கை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்,  மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 

எஞ்சிய கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT