தமிழ்நாடு

பெரியாருக்கு பா.ஜ.க. காட்டும் மரியாதையா இது?

27th Sep 2020 11:46 AM

ADVERTISEMENT

திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறுத்து சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ''திருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. 

பெரியார் பிறந்தநாள் அன்றுதான் தமிழக பிஜேபி தலைவர் முருகன், பெரியார் சமூகநீதிக்காக பாடுபட்டவர். அவரை வாழ்த்துவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை என்றார். இதுதான் அவர்கள் பெரியாருக்கு காட்டும் மரியாதையா?

நீட், புதிய கல்விக் கொள்கை, விவசாயிகள் போராட்டம் இவற்றுக்கான உங்கள் பதில் பெரியார்தானா?'' என்று கனிமொழி பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

Tags : பெரியார் சிலை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT