தமிழ்நாடு

பவானியில் அதிமுக இளைஞரணி நிர்வாகிகள் 200 பேர் கண்தானம்

27th Sep 2020 02:46 PM

ADVERTISEMENT


பவானி: பவானியில் அதிமுக இளைஞரணி, மாணவர் அணி மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் 200 பேர் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் முன்னிலையில் கண் தானம் செய்தனர்.

பவானி வடக்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு, இளைஞர் அணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மாணவரணி சார்பில்  நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பவானி ஒன்றிய அதிமுக செயலாளர் எஸ்.எம்.தங்கவேலு தலைமை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ், பவானி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பூங்கோதை வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதிமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் கண் தானம் செய்த 200 பேருக்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து, பவானி தொகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.

மேலும், அதிமுகவில் இணைந்த சன்னியாசிபட்டி ஊராட்சித் தலைவர் சித்திரசேனன் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கே.கே.விஸ்வநாதன், பவானி ஒன்றியக் குழு உறுப்பினர் ப.குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT