தமிழ்நாடு

சீர்காழியில் வீட்டில் இருந்த 12 பாம்புகுட்டிகள் பிடிப்பட்டன

27th Sep 2020 11:07 AM

ADVERTISEMENT


சீர்காழி: சீர்காழியில் ஒருவரது வீட்டில் நாகபாம்பு இட்ட 27முட்டைகளிலிருந்து பாம்புகுட்டிகள் வெளியேற தொடங்கின. அவற்றில் 12 பாம்புகுட்டிகளை பாம்புபிடி வீரர் பிடித்து வனபகுதியில் விட்டார்.

சீர்காழி கீழவீதி மேட்டுதெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள். பந்தல் அமைப்பாளரான இவரது வீட்டின் பின்பகுதியில் நாகபாம்பு 27முட்டைகளை இட்டிருந்தது. இந்த முட்டைகளிலிருந்து பாம்புகுட்டிகள் வெளிவரத் தொடங்கின. இதனை கண்டு அச்சமடைந்த கலியபெருமாள், சீர்காழி புளிச்சகாடு பகுதியைச் சேர்ந்த பாம்புபிடி வீரர் தினேஷிடம் தகவல் அளித்தார்.

அதன்படி அங்கு சென்ற தினேஷ் முட்டையிலிருந்து வெளிவரத் தொடங்கிய 12 பாம்புகுட்டிகளை லாவகமாக பிடித்தார். மற்ற பாம்புகுட்டிகள் அருகில் இருந்த அடர்ந்த பகுதியில் புகுந்து மறைந்தன. பிடிப்பட்ட பாம்புகுட்டிகளை தினேஷ் வனபகுதியில் கொண்டு விட்டார். வீட்டில் 27 பாம்பு குட்டிகள் இருந்தது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ADVERTISEMENT

Tags : snakes caught
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT