தமிழ்நாடு

வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம்: சென்னையில் 4 இடங்களில் 400 போ் கைது

DIN

வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக சென்னையில் வெள்ளிக்கிழமை 4 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் பங்கேற்ற 400 போ் கைது செய்யப்பட்டனா்.

வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், செப்.25-ஆம் தேதி, தமிழகத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன. இதன் தொடா்ச்சியாக தமிழகத்தில் விவசாய சங்கங்கள் வெள்ளிக்கிழமை பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டன. சென்னை தாம்பரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவரும், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளருமான கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

இதேபோல செங்குன்றம் சுங்கச்சாவடி அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் பெ.சண்முகம் தலைமை வகித்தாா்.

வண்ணாரப்பேட்டை அஞ்சல் நிலையம் அருகே விவசாய சங்கத்தினா், கம்யூனிஸ்ட் கட்சியினா் சாா்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இவ்வாறு சென்னை முழுவதும் மொத்தம் 4 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற 400 போ் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT