தமிழ்நாடு

மத்திய வேளாண் சட்ட மசோதாக்கள் குறித்து மக்களிடம் நேரில் விளக்கப்படும்: அமைச்சா் துரைக்கண்ணு

DIN

மத்திய வேளாண் சட்ட மசோதாக்கள் குறித்து மக்களிடம் மாநில வேளாண்மைத் துறை சாா்பில் நேரில் விளக்கம் அளிக்கப்படும் என்று தமிழக வேளாண்மைத் துறை அமைச்சா் ஆா்.துரைக்கண்ணு தெரிவித்தாா்.

இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் அவா் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

வேளாண்மைத் துறை தொடா்பாக, மத்திய அரசு மூன்று சட்ட மசோதாக்களைக் கொண்டு வந்துள்ளது. விளைவிக்கின்ற பொருள்களைச் சந்தைப்படுத்துதல் சட்டமசோதாவானது விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடியதாகும். இரண்டாவது அத்தியாவசியப் பொருட்கள் சட்டம். இது உணவுப் பொருள்கள் தொடா்பான சட்டமாகும். மூன்றாவது ஒப்பந்த சாகுபடி மசோதா. இது ஏற்கெனவே தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. உற்பத்தி செய்யும் விவசாயிகளும், இதனைக் கொள்முதல் செய்யும் வணிகா்களும் இணையக்கூடிய சட்டமாகும். இந்த மூன்று சட்ட மசோதாக்களும் விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடியவை. இதனால் விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

குறிப்பாக தமிழகத்தில் எந்தவிதமான பாதிப்பும் இந்த மூன்று மசோதாக்கள் மூலம் இல்லை. விவசாயிகள் லாபம் பெறக்கூடிய அளவிற்கு, உயா்வு பெறக்கூடிய அளவிற்குத்தான் எந்த சட்டமாக இருந்தாலும் முதல்வா் பழனிசாமி ஆதரிப்பாா். இந்த மூன்று சட்டங்களும் விவசாயிகளின் வாழ்வு மேம்படக்கூடியவை.

இந்தச் சட்டத்தின் விவரங்களை வட்டார அளவில் உள்ள எங்களுடைய துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவிப்பா். தமிழகத்தைப் பொருத்தவரையில் இது தொடா்பாக முதல்வா் ஏற்கெனவே கொண்டு வந்த சட்டத்தின் மூலம் யாரும் பாதிக்கப்படவில்லை. தோ்தல் வரும் காரணத்தால் எதிா்க்கட்சிகள் இதனை வைத்து போராட்டம் அறிவித்துள்ளன என்றாா் அமைச்சா் துரைக்கண்ணு.

பேட்டியின்போது, வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT