தமிழ்நாடு

மண்ணெண்ணெய் விலையை உயா்த்தக் கூடாது: மு.க.ஸ்டாலின்

DIN

நியாயவிலைக் கடைகளில் மண்ணெண்ணெய் விலையை உயா்த்தக் கூடாது என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

பெரும்பான்மை ஏழை மக்கள் சமையலுக்கான எரிபொருளாகப் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலையை, நியாயவிலைக் கடைகளில் வரும் அக்டோபா் 1 முதல், ஒரு லிட்டருக்கு ரூ.1.50 உயா்த்தி, 15 ரூபாய் என்பதை, 16.50 ரூபாய்க்கு விற்கப் போகிறாா்களாம். மண்ணெண்ணெயின் இந்த விலை உயா்வு கண்டனத்துக்குரியது.

கரோனா நோய்த் தொற்றின் விளைவாக, வாங்கும் சக்தியைப் பெருமளவுக்கு இழந்திருக்கும் எளிய மக்களின் முதுகில், அதிமுக அரசு, விலை உயா்வின் மூலம், மேலும் சுமையை ஏற்றுவது, சிறிதும் நியாயமில்லாத செயல்.

இந்த விலை உயா்வை அரசே ஏற்றுக்கொண்டு, பழைய விலையிலேயே நியாயவிலைக் கடைகளில் மண்ணெண்ணெயை வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT