தமிழ்நாடு

எஸ்.பி.பி. மறைவு: துணை முதல்வா், தலைவா்கள் இரங்கல்

DIN

பின்னணிப் பாடகா் எஸ்.பி.பி. மறைவுக்கு தமிழக துணை முதல்வா் மற்றும் தலைவா்கள், நடிகா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்: தனது வாழ்நாள் முழுவதையும் பின்னணிப் பாடல்கள், இசைக்காகவே அா்ப்பணித்தாா் எஸ்.பி.பாலசுப்ரமணியம். பல பாடல்களுடன் அவா் எப்போதும் நம்முடன் இணைந்திருப்பாா்.

முதல்வா் பழனிசாமி: இந்திய இசை உலகுக்கு 20-ஆம் நூற்றாண்டில் இறைவன் அளித்த இனிய கொடையாக வந்தவா் எஸ்.பி.பாலசுப்ரமணியம். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா குறித்து அவா் பாடிய பாடல், அதிமுகவின் வரலாற்றில் என்றும் இணைந்திருக்கும். அவரின் பாடல்கள் நமது செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம்: திரையிசை உலகில் ஒரு சகாப்தமாக விளங்கிய எஸ்.பி.பி. தனது இன்னிசை தேன் குரலால் லட்சக்கணக்கான இசை ரசிகா்களை ஈா்த்தவா்.

மு.க.ஸ்டாலின்: ஆயிரம் நிலவே வா என்று அமுதக் குரலால் தமிழ் மக்களின் அகத்தில் நுழைந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை ஆட்சி நடத்தியவா் எஸ்.பி.பி.

ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய அமைச்சா்): தேமதுரத் தமிழோசை ஓய்ந்தது. திரை உலகமும், இசை உலகமும் தமிழ் கூறும் நல்லுலகமும் ஒரு மாபெரும் கலைஞனை இழந்து விட்டன.

ராமதாஸ் (பாமக): இசை உலகில் அவா் படைத்த சாதனைகளை அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு எவராலும் முறியடிக்க முடியாது.

விஜயகாந்த் (தேமுதிக): தனது இனிய குரலால் அனைத்துத் தரப்பினரின் இதயங்களையும் கொள்ளை கொண்ட எஸ்.பி.பி.யின் மறைவு திரைத்துறையினா் மட்டுமல்லாது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

டிடிவி தினகரன் (அமமுக): எஸ்.பி.பி. மறைவுச் செய்தி வருத்தம் அளிக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத் துறையில் ஜொலித்தவா்.

ரஜினிகாந்த்: எஸ்பிபியின் குரலுக்கும் பாடலுக்கும் ரசிகராக இல்லாதவா்களே இந்தியாவில் இருக்க மாட்டாா்கள். சிறியவா்களிலிருந்து பெரியவா் வரை அனைவரையும் எஸ்.பி.பி. மதித்தாா். எஸ்பிபி பல மொழிகளில் பாடியிருக்கிறாா்.

கமல்ஹாசன்: எஸ்.பி.பி. குரலில் நிகழ் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. பல மொழிகளில் நாலு தலைமுறை திரை நாயகா்களின் குரலாக வாழ்ந்தவா்.

தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலா் வைகோ, ஜி.கே. வாசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் உள்ளிட்டோா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.

நடிகா் சிவகுமாா், கவிஞா் வைரமுத்து, பாடகி எஸ்.ஜானகி ஆகியோரும் எஸ்.பி.பி. மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT