தமிழ்நாடு

சென்னையில் கண்ணாமூச்சி காட்டும் கரோனா பாதிப்பு

DIN


சென்னை: கரோனா தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான சென்னையில், தொற்றுப் பரவல் அதிகமாகவே இருந்தது. வேறெந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு சென்னையில் நாள்தோறும் கரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் மேல் நீடித்தது.

பொதுமுடக்கம் நீட்டிப்பு, தொடர் பரிசோதனை உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வாரங்களாக சென்னையில் மெல்ல கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

ஆனாலும், படிப்படியாகக் குறைந்துவிடாமல், சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை பத்தாயிரம் என்ற அளவிலேயே நீடிக்கிறது. சில நாள்களுக்கு முன்பு பத்தாயிரத்துக்கு மேல் இருந்த நிலையில் இரண்டு நாள்களாக பத்தாயிரத்துக்கும் கீழ் குறைந்து இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் கரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை இன்று பத்தாயிரத்தை எட்டியுள்ளது.

சென்னையில் இதுவரை கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,60,926 ஆக உள்ளது. இதில் 1,47,798 பேர் குணமடைந்துள்ளனர். 10 ஆயிரம் பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். கரோனா பாதித்தவர்களில் 3,128 பேர் பலியாகிவிட்டனர்.

சென்னையில் தொடர்ந்து அண்ணா நகர் மற்றும் கோடம்பாக்கத்தில் மட்டும் கரோனா பாதிப்பு ஆயிரத்து நூறு என்ற அளவிலேயே நீடிக்கிறது. இங்கு கரோனா பாதிப்பு ஆயிரத்துக்குக் கீழ் குறையாமல் இருப்பது, சுகாதாரத் துறையினருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT