தமிழ்நாடு

எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இசைஞானி இளையராஜா

26th Sep 2020 07:55 PM

ADVERTISEMENT

மறைந்த எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் ஆத்மா சாந்தி அடைய இசைஞானி இளையராஜா திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார். 

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டார். பின் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த எஸ்.பி.பி-க்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று பிற்பகல் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார். 

இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு காரணமாக அவரது உயிா் பிரிந்ததாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்திலும் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிலும் எஸ்.பி.பி.யின் உடலுக்கு மக்கள் ஏராளமாகத் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், திருவள்ளூர் தாமரைப்பாக்கத்தில் அவருக்கு சொந்தமான இடத்தில் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இந்த நிலையில் மறைந்த எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் ஆத்மா சாந்தி அடைய இசைஞானி இளையராஜா திருவண்ணாமலை கோயிலில் இன்று மோட்ச தீபம் ஏற்றினார். 
 

ADVERTISEMENT

Tags : Thiruvannamalai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT