தமிழ்நாடு

அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரிடர் மீட்புப்பணிகள் செயல்விளக்கம் 

DIN

அருப்புக்கோட்டை:  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் மேலாண்மை செயல்விளக்க நிகழ்ச்சி வட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை  வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற பேரிடர் மேலாண்மை செயல்விளக்க நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு உரையாற்றினார்.

அதனைத்தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயப்பாண்டி மற்றும் உதவி அலுவலர் ஷேக் உதுமான் ஆகியோர் நிகழ்த்திய செயல் விளக்கத்தின்போது,பெருவெள்ளத்திலிருந்து காப்பாற்றிட லைஃப் ஜாக்கெட், லைஃப் பாய் மற்றும் கயிறுகள் மூலமாக ஆற்றின் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு பொதுமக்களைக் காப்பாற்றும் விதம் குறித்தும், சூரைக்காற்றுக்கு பெரிய மரங்கள் விழுந்துவிட்டாலோ அல்லது மின்கம்பிகள் அறுந்து விழுந்திருந்தாலோ தீயணைப்புத்துறையின் உதவியை நாடவேண்டுமெனவும், கிணற்றிலோ,செப்டிக் டாங்கிலோ விஷவாயு தாக்கி யாரும் பாதிக்கப்பட்டாலோ,பெரும் தீவிபத்துக்காலங்களிலோ அல்லது வெள்ளத்தில் கட்டட உச்சியில் யாரும் வெளியேறமுடியாமல் சிக்கியிருந்தாலோ அருப்புக்கோட்டையைப் பொறுத்தவரை 04566-240101 அல்லது 101க்கு போன் மூலம் தீயணைப்புத்துறையின் உதவியை கேட்கலாம் எனவும் தெரிவித்தனர்.

மேலும் எண்ணெய் அல்து பெட்ரோலியப் பொருள்கள்,எரிவாயு உருளை ஆகியன தீப்பிடித்தால் சட்டென ஈரமான துணி அல்லது சாக்குப்பையையோ, மணலையோ அல்லது நீரையோ ஊற்றி கூடுமானவரை தீயணைப்புத்துறையினர் வரும்வரை பொதுமக்களே நெருப்பை அணைக்க முயற்சிக்கலாம் என்பது குறித்தும் செயல்விளக்கம் செய்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் சுமார் 100க்கு மேற்பட்ட பொதுமக்கள் நேரில் கலந்து கொண்டு பேரிடர் மேலாண்மை செயல்விளக்க நிகழ்ச்சியில் விழிப்புணர்வு பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT