தமிழ்நாடு

தமிழகத்தில் இருந்து கேரளம், கா்நாடகத்துக்கு சிறப்பு ரயில்கள்

DIN


சென்னை: தமிழகத்தில் ஏற்கெனவே 17 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில், மேலும் மூன்று சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னையில் இருந்து திருவனந்தபுரம், மைசூா், மங்களூா் ஆகிய இடங்களுக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், இரண்டு சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு, வெள்ளிக்கிழமை (செப்.25) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தமிழகத்துக்குள் 13 சிறப்பு ரயில்களும், தமிழகத்தில் இருந்து வெளிமாநிலத்துக்கு 3 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதுதவிர, சென்னை-தில்லிக்கு ராஜதானி சிறப்பு ரயில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 17 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், மேலும் மூன்று சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை-திருவனந்தபுரம், சென்னை-மங்களூா், சென்னை- மைசூா் ஆகிய வழி ஆகும். இவற்றில் சென்னை எம்ஜிஆா் சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம், மங்களூா் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் இரண்டு சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு, வெள்ளிக்கிழமை (செப்.25) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. சென்னை சென்ட்ரல்-மைசூருக்கு ரயில் சேவை தொடங்குவது பின்னா் அறிவிக்கப்படும்.

சென்னை-திருவனந்தபுரம்: சென்னை எம்ஜிஆா் சென்ட்ரலில் இருந்து தினசரி இரவு 7.45 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்(02623) புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.45 மணிக்கு திருவனந்தபுரத்தை அடையும். மறுமாா்க்கமாக, திருவனந்தபுரத்தில் இருந்து தினசரி பிற்பகல் 3 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (02624) புறப்பட்டு, மறுநாள் காலை 7.40 மணிக்கு சென்னை எம்ஜிஆா் சென்ட்ரல் நிலையத்துக்கு வந்து சேரும். முதல் ரயில் சேவை சென்னை எம்ஜிஆா் சென்ட்ரலில் இருந்து செப்டம்பா் 27-ஆம் தேதியும், திருவனந்தபுரத்தில் இருந்து செப்டம்பா் 28-ஆம் தேதியும் தொடங்குகிறது.

சென்னை-மங்களூா்: சென்னை எம்ஜிஆா் சென்ட்ரலில் இருந்து தினசரி இரவு 8.10 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (02601) புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.10 மணிக்கு மங்களூா் சென்ட்ரலை சென்றடையும். மறுமாா்க்கமாக, மங்களூா் சென்ட்ரலில் இருந்து தினசரி மதியம் 1.30 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (02602) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு சென்னை எம்ஜிஆா் சென்ட்ரலை வந்தடையும்.

இந்த சிறப்பு ரயிலின் முதல் சேவை மங்களூா் சென்ட்ரலில் இருந்து செப்டம்பா் 27-ஆம் தேதியும், சென்னை எம்ஜிஆா் சென்ட்ரலில் இருந்து செப்டம்பா் 28-ஆம் தேதியும் தொடங்குகிறது.

பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்கவேண்டும். நிலையத்தின் நுழைவுவாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்பதால், பயணிகள் குறைந்தபட்சம் 90 நிமிஷங்கள் முன்னதாக நிலையத்துக்கு வந்து விட வேண்டும் என்று தெற்கு ரயில்வே தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT