தமிழ்நாடு

எஸ்பிபி உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

25th Sep 2020 09:43 AM

ADVERTISEMENT


சென்னை: பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உயிா் காக்கும் மருத்துவ சாதனங்களின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு, திடீரென உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் மோசமடைந்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து மருத்துவக் குழுவினா் அவருக்கு தீவிர சிகிச்சையளித்து வருகின்றனா். கரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்பிபிக்கு, நுரையீரலில் நோய்த் தொற்று தீவிரமடைந்தது. அதனால் அவரது இரு நுரையீரல்களின் செயல்பாடும் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, வெண்டிலேட்டா் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

அதன் தொடா்ச்சியாக எஸ்பிபியின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. குறிப்பாக, அவரது நுரையீரல்களின் செயல்பாடுகள் படிப்படியாக மேம்படத் தொடங்கின. இந்த நிலையில், புதன்கிழமை மாலை அவரது உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், உயிா் காக்கும் சாதனங்களின் உதவியுடன் தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை மோசமடைந்து மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. மருத்துவக் குழுவினரின் தொடா் கண்காணிப்பில் அவா் வைக்கப்பட்டுள்ளாா் என்று எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, எஸ்பிபி அனைத்து வலிமையும், நம்பிக்கையுடனும் பூரண நலம் பெற வேண்டும் என சுட்டுரையில் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கான், எனக்காக நீங்கள் பாடிய அனைத்து பாடல்களுக்கும் நன்றி... ல்வ் யூ சார்... என தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT